குடைசாய்ந்த முச்சக்கரவண்டி



முச்சக்கரவண்டி குடைசாய்ந்து மூவர் படுகாயம்
-ஏ.எச்.ஏ. ஹுஸைன் -
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மண்முனைத்துறை பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி குடைசாய்ந்ததில் அதை செலுத்திச் சென்ற ஓட்டுநர் உட்பட மூவர் படுகாயமடைந்து மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டி மட்டக்களப்பிலிருந்து கொக்கட்டிச்சோலைக்குச் சென்று கொண்டிருந்தபோது சனிக்கிழமை இரவு 6.30 மணியளவில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விசாரணைகள் இடம்பெறுகின்றன.