பிரிட்டனில் தொடக்கப்பள்ளிச் சிறார்கள் 'ஸ்ட்ரைக்' !
பிரிட்டனில் ஆறு வயது, ஏழு வயது பள்ளிச் சிறுவர்களுக்கு தேசிய அளவிலான பொதுத் தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து தொடக்கப் பள்ளிச்சிறுவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போகிறார்களாம் !
பிரிட்டனில் தொடக்கப் பள்ளிச் சிறுவர்கள் "ஸ்ட்ரைக்" திட்டம் !
சுமார் 300 பெற்றோர் குழுக்கள் ஏற்பாடு செய்திருக்கும் இந்த வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பள்ளிச்சிறுவர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.
"சேட்ஸ்" (SATS) என்றழைக்கப்படும், தரச் சாதனைத் தேர்வுகளின் மீதே மிகவும் குறுகிய நோக்கோடு கவனம் செலுத்தப்படுவது, பள்ளிச் சிறார்களின் பரந்துபட்ட கல்வித் தரத்தைக் குலைக்கும் என்று ஆர்வலர்கள் வாதிடுகின்றனர்
'சிறார்கள் சிறுவர்களாக இருக்கட்டும்' (Let Our Kids Be Kids ) என்ற இந்த இயக்கம் , இன்று செவ்வாய்க்கிழமை வகுப்புப் புறக்கணிப்பு தினத்தை குழந்தைகளுக்கு வேடிக்கை மூலம் கல்வி தரும் தினமாக அமைத்துத் தருமாறு பெற்றோரைக் கோருகிறது.
ஆனால் பிரிட்டனின் கல்வி அமைச்சரோ வகுப்புகளை ஒரு நாள் கூட புறக்கணிப்பது என்பது சிறார்களைப் பாதிக்கும் என்கிறார்.