ஜனாதிபதி இங்கிலாந்தை நோக்கி விஜயம்



லண்டனில் நடைபெறவுள்ள ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை இங்கிலாந்தை நோக்கி பயனித்துள்ளதாக அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியுடன் 15 பேர் கொண்ட குழுவும் பயனித்துள்ளதாகவும் அவரது ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன் விடுத்த அழைப்பின் அடிப்படையில் அங்கு செல்லும் ஜனாதிபதி, பிரதமர் கேமரூனையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த விஜயத்தை நிறைவு செய்ததன் பின்னர், எதிர்வரும் 13ம் திகதி அவர் இந்தியாவுக்கான விஜயத்தையும் மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.