பெங்களூரு:
ஐபிஎல் டி20 போட்டியின் 9வது சீசனில் கோப்பையை வென்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அசத்தியுள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெங்களூருவை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக வார்னர் 69, யுவராஜ் 38, பென் கட்டிங் 39 ரன்களும் எடுத்தனர்.
209 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
ஐதராபாத் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. பெங்களூருவில் அதிகபட்சமாக கெயில் 76 ரன்களும், கோலி 54 ரன்களும் எடுத்தனர். #IPLT20


Post a Comment
Post a Comment