இலங்கையின் கிழக்கே, அம்பாறை மாவட்டத்தில் தமிழ்க் கிராமொன்றில் இந்து ஆலயங்களின் விக்கிரகங்கள் அடையாளந் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளன.
சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள கோரக்கர் கிரராமத்திலுள்ள அகோர மாரியம்மன் ஆலயத்திலும் அதன் வளாகத்திலுள்ள பிள்ளையார் ஆலயத்திலும் இந்த தாக்குதல்கள் நேற்று வியாழன் இரவு நடந்துள்ளன.
ஆலயத்தின் மூலஸ்தானத்தை உடைத்து விக்கிரகங்களை சேதப்படுத்துவதற்கு அல்லது எடுத்துச் செல்வதற்கு இந்த நபர்கள் முயன்றுள்ளதாக ஆலய நிர்வாகத்தின் துணைத் தலைவர் வெள்ளையன் மோகன் கூறுகின்றார்.
அம்பாறை மாவட்டத்தில் தமிழ்க் கிராமொன்றில் இந்து ஆலயங்களின் விக்கிரகங்கள் அடையாளந் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளன.
சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள கோரக்கர் கிரராமத்திலுள்ள அகோர மாரியம்மன் ஆலயத்திலும் அதன் வளாகத்திலுள்ள பிள்ளையார் ஆலயத்திலும் இந்த தாக்குதல்கள் நேற்று வியாழன் இரவு நடந்துள்ளன.
ஆலயத்தின் மூலஸ்தானத்தை உடைத்து விக்கிரகங்களை சேதப்படுத்துவதற்கு அல்லது எடுத்துச் செல்வதற்கு இந்த நபர்கள் முயன்றுள்ளதாக ஆலய நிர்வாகத்தின் துணைத் தலைவர் வெள்ளையன் மோகன் கூறுகின்றார்.பரிவார விக்கிரகங்களை அகற்றிய நபர்கள், அவற்றை ஆலய வளாகத்தினுள்ளேயே மண்ணில் தலை கீழாக புதைத்துள்ளனர்.
ஐம்பொன்களால் செய்யப்பட்ட ஆஞ்சநேயர் மற்றும் முருகன் விக்கிரகங்கள் இரண்டும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
ஆலய வளாகத்தில் காணப்பட்ட திரிசூலங்களும் வேல்களும் பிடுங்கி சேதமாக்கப்பட்டு அங்கும் இங்கும் வீசப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
வழிபாட்டு தலங்கள் மீது இதுபோன்ற தாக்குதல்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆலய நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
சிறப்பு தடயவியல் பிரிவினரின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சம்மாந்துறை பொலிஸார் கூறுகின்றனர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு தேசிய கலந்துரையாடல்கள் மற்றும் சக வாழ்வு அமைச்சர் மனோ கணேசன் அந்த பகுதிக்கான பொலிஸ் உயரதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

