கொழும்பு வௌ்ளவத்தையில் ரயிலில் மோதி இருவர் உயிரிழந்துள்ளனர்
மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் இன்று காலை 8 மணியளவில் மோதுண்டு, இருவரும் உயிரிழந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
விபத்தில் பெண்ணொருவரும் ஆணொருவரும் உயிரிழந்துள்ளதுடன், சடலங்கள் வௌ்ளவத்தை ரயில் நிலையத்திற்கு ஒப்படைத்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

