கடந்த மாதத்திற்கான நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பாவனையாளர் பற்றுச் சீட்டு பாவனையாளர்களுக்கு 2 நாட்கள் தாமதித்து இம்முறை அக்கரைப்பற்றில் வினியோகிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் தாமதமானதால் 30 ரூபா முதல் 3000 ருபா வரையில் பாவனையாளர்கள் பாவித்ததற்கு ஏற்ப குறித்த பற்றுச் சீட்டில் கட்டணம் உயரந்தும் காணப்படுகின்றது. பிராந்திய வணிக உத்தியோகத்தரின் அசமந்தம் அல்லது கவனயீனம் பாவயைாளர்கள் பாதிக்கப்படுவதற்கு காரணமாகும். பாதிப்புக்கு ஆட்பட்ட சில பாவனையாளர்கள் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுமுள்ளனர்.

