(க.கிஷாந்தன்)
அண்மையில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தில் சாமிமலை லெட்புரூக் தோட்டத்த்தில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 96 பேரும், கவரவிலை தோட்டத்தில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 65 பெரும் வீடுகளை இழந்து உறவினர் வீடுகளிலும், பாடசாலையிலும் தங்க வைக்கப்படுள்ளார்கள்.
இவர்களை 22.05.2016 அன்று மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரம், மத்திய மாகாண சபை உறுப்பினர் சரஸ்வதி சிவகுரு ஆகியோர் அமபகமுவ பிரதேச சபை முன்னாள் தலைவர் ஜீ. நகுலேஸ்வரன் சகிதம் பார்வையிட்டு ஆறுதல் கூறியதோடு புதிய வீடுகளை தலா ஏழு பேர்ச் காணியில் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும், தற்காலிகக் குடிகளை அமைக்க கூரைத் தகடுகள் வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

