இலங்கை நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மோதல் சம்பவத்தை ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட குழுவின் முதல்கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
அந்த மோதல் தொடர்பாக ஆராய்வாதற்கு துணை சபாநாயகர் திலங்க சுமதிபால மற்றும் குழுக்களின் துணைத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் தலைமையிலான குழு ஒன்றை சபாநாயகர் தாக்குதல் நடைபெற்ற பிறகு நியமித்திருந்தார்.

இந்தக் குழு தமது முதல்க்கட்ட விசாரணை அறிக்கை இப்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை சம்மந்தமாக ஆராய்வதற்கு நாடாளுமன்றத்தின் விசேட தேர்வு குழுவின் கூட்டம் வியாழன் காலை இடம்பெறும் என கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான நடவடிக்கை குறித்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.