கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான காளிதாசன் (68) உடல் நலக்குறைவால் தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை (மே 29) நள்ளிரவு காலமானார்.
கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காளிதாசன், தஞ்சாவூரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். திருப்பத்தூரை பூர்வீகமாகக் கொண்ட அவர், "தாலாட்டு' என்ற படத்தின் முலம் பாடலாசிரியராக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு படங்களுக்கு பாடல் எழுதி வந்த காளிதாசன், இதுவரை சுமார் 150 பாடல்களை எழுதியுள்ளார்.
வைகாசி பொறந்தாச்சு படத்தில் இடம்பெற்ற ""தண்ணி குடம் எடுத்து...'', அருணாசலம் படத்தில் ""தலை மகனே கலங்காதே...'' ஆகிய பாடல்கள் அவரை பிரபலமாக்கின. தேவாவின் இசையமைப்பில் பல பாடல்களை எழுதியுள்ள இவர், பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
காளிதாசனின் உடல் தஞ்சையிலிருந்து சென்னைக்கு திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டு, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது மகனின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், மூலக்கொத்தளம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மறைந்த கவிஞர் காளிதாசனுக்கு மனைவி புவனேஸ்வரி, மகன் பாலசுப்பிரமணியன் உள்ளனர். தொடர்புக்கு: 93452 - 03175.

Post a Comment
Post a Comment