கொரிய மொழிப் போட்டிப் பரீட்சைக்கு 15 மத்திய நிலையங்கள் ஊடாக விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
இதன்படி, அனுராதபுரம், பதுளை, கண்டி, மாத்தறை, இரத்தினபுரி போன்ற பிரதேசங்களின் மாகாண காரியாலயங்களிலும்,காலி, கடவத்தை, சீதுவ, தங்கல்லை, குருணாகலை, திருகோணமலை, வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பயிற்சிக் காரியாலயத்திலும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கான விண்ணப்பப்படிவங்கள் ஜூன் மாதம் 20 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரையில் விநியோகிக்கப்படும். 18 இற்கும் 39 இற்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள் இந்தப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.


Post a Comment
Post a Comment