44 விசாரணைகள் பூர்த்தி



ஊழல்களை வெளியிடும் வேலைத்திட்டமும், சட்டத்திற்கு அமைய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் 44 விசாரணைகளை பூர்த்தி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நடத்தும் விசாரணைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குற்றங்கள் மற்றும் ஊழல்களை பார்க்கும் போது அவற்றை விசாரணை செய்யக் கூடிய பயிற்சி பெற்ற அதிகாரிகள் இருக்கவில்லை. இதனால், முதல் கட்ட அதிகாரிகள் குழுவுக்கு பயிற்சியளிக்க காலதாமதமானது.
இரண்டாவது அதிகாரிகள் குழுவிற்கு இலங்கையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.