ஆஸ்திரேலியாவுக்கு படகில் செல்ல முயன்ற இலங்கைத் தமிழர்கள் 44 பேர் இந்தோனேஷியாவின் அச்சே மாகாணத்தின் கடற்பரப்பில் பிடிபட்டனர்.
இந்தியக் கொடியுடன் சென்ற இந்த படகில் 15 பெண்கள் மற்றும் ஒன்பது குழந்தைகள் இருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
தமிழ் நாட்டில் பதிவு செய்யப்பட்ட படகுபோல் தோன்றும் இப்படகு சனிக்கிழமையன்று அச்சேயின் தலைநகரான பண்டா அச்சே அருகே உள்ள லோக்ங்கா என்ற கடலோரப் பிரதேசத்திற்கு அப்பால் கடல் பரப்பில், மீனவர்களால் முதலில் பார்க்கப்பட்டது.
கிறிஸ்துமஸ் தீவு நோக்கி பயணம்
இந்தோனேஷிய குடிவரவுத்துறை அதிகாரிகளுக்கு மீனவர்கள் தகவல் கொடுத்தனர்.


Post a Comment
Post a Comment