கந்தளாய் பொலிஸ் தலைமையகத்தில் ரோந்துப் பிரிவு அதிகாரி ஒருவரின் துப்பாக்கி செயற்பட்டதால் அருகிலிருந்த பொலிஸ் அதிகாரியொருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்.
முதுகுப் பகுதிக்கு துப்பாக்கி சூடு பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த பொலிஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார்.
கடமைகளை நிறைவேற்றிவிட்டு வந்த பொலிஸ் அதிகாரியொருவர் தனது துப்பாக்கியை ஒப்படைக்கும் போது தவறுதலாக துப்பாக்கி செயற்பட்டதால் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

