களனிப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கை இன்று



மாணவர்களிடையே காணப்பட்ட பகிடிவதைப் பிரச்சினை காரணமாக மூடப்பட்டிருந்த களனிப் பல்கலைக்கழகம் இன்று (01) மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படுகின்றது.
விடுதி வசதி வழங்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நேற்று (31) சமூகமளிக்குமாறு முகாமைத்துவப் பிரிவு அறிவித்தல் விடுத்திருந்தது.
பகிடிவதை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விரிவுரையாளர்கள் 20 பேரைக் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. உயர் கல்வி அமைச்சின் ஆலோசனைக்கமைய இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.