சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் ஏழ்வருக்கு பிரதி பொலிஸ்மா அதிபர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இன்று முதல் அமுலாகும் வகையில் பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவின் ஆலோசனைக்கமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன உள்ளிட்ட 07 பேரே இவ்வாறு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
அதன்படி, அஜித் ரோஹன, வசந்த விக்ரமசிங்க, பத்மலால் சந்துன்கஹவத்த, சம்பிக சிறிவர்தன, பிரியன்த ஜயகொடி, நிமல் பெரேரா, மர்வின் விக்ரமசிங்க ஆகியோரே பிரதி பொலிஸ்மா அதிபர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

