மகளுக்கும் கள்ளக் காதலனுக்கும் மரண தண்டனை



(கிசாந்தன்)

இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராகலை மெதவத்த பகுதியில் 1995ஆம் ஆண்டு 01 மாதம் 26ம் திகதி இடம்பெற்ற ஒருவரின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் 2 பேருக்கு நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி ஆச்சாரி சுமுது பிரேமசந்திர 30.06.2016 அன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 

1995 ஆம் ஆண்டிலிருந்து தொடா்ந்து நடத்திய விசாரணைகளின் பின்னரே இவ்வாறு இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

கள்ளத் தொடர்பின் மூலமான கதலனுடன் சேர்ந்து தந்தையை கொலை செய்யத மகளுக்கும் கள்ளக் காதலனுக்குமே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இராகலை மெதவத்த பகுதியை சேர்ந்த அசோக பத்திரண, விசோகுமாரி விக்கிரமசிங்க ஆகிய இரண்டு பேருமே குற்றவாளிகளாக இணங்காணப்பட்டுள்ளனர். 

தமது கள்ளத் தொடர்பு எதிர்ப்பு தெரிவித்த மெதவத்த பகுதியில் உள்ள சோமசிறி என்பவரையே மேற்படி குற்றவாளிகள் கொலை செய்துள்ளனர். 

இரண்டு குற்றவாளிகளுக்கும் 6 மாத கடுங்காவல் சிறைதண்டனையுடன், மரணதண்டனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கொலைசெய்யப்பட்ட சோமசிறி என்பவர் மரண தண்டனை விதிக்கப்பட்ட விசோகுமாரி விக்கிரமசிங்கவின் தந்தை ஆவார்.