காலஞ்சென்ற மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அலவி மௌலானாவின் ஜனாஸா இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
தெஹிவளை ஜும்மா பள்ளி மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
காலஞ்சென்ற அலவி மௌலானாவின் ஜனாஸாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அன்னாரின் வீட்டிற்குச் சென்றிருந்தார்.
நேற்று பிற்பகல் மேல் மாகாண முன்னாள் ஆளுனர் அலவி மௌலானா தனது 84 ஆவது வயதில் காலமானார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா உட்பட அரசியல்வாதிகள் மற்றும் பெருந்திரளான மக்கள் அவரின் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்துகொண்டனர்.


Post a Comment
Post a Comment