கைதுசெய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 5ம் திகதி வரை இவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய உத்தரவிட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
நிதி மோசடி சட்டத்தின் கீழ், சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர், தனியார் நிறுவனம் ஒன்றின் பணிப்பாளரை அச்சுறுத்தி 60 கோடி ரூபாய் பணத்தை காசோலை மூலம், சஜின்வாஸ் பெற்றுக் கொண்டுள்ளதாக கூறினர்.
எனினும் பிரதிவாதி தரப்பில் ஆஜரான சட்டத்தரணி குறித்த குற்றச்சாட்டை நிராகரித்தார்.
விடயங்களை ஆராய்ந்த நீதவான் அடுத்த வழக்கு விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பணிப்பாளரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்தார்.