தென் பசுபிக் கடல் பகுதி அருகே அமைந்துள்ள சொலமன் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலைட்ட மாகாணத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள அவுக்கி நகருக்கு 17 கி.மீ தொலைவில், 94 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.


Post a Comment
Post a Comment