ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தரிசனம்





(க.கிஷாந்தன்)

அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு மின்வலு மற்றும் வலுசக்தி  அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  16.06.2016 அன்று விஜயம் செய்தார்.

ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ஆலய அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள ஒரு லட்சம் ரூபாவுக்கான காசோலையை ஆலய நிர்வாகசபை உறுப்பினர்களிடம் வழங்கி வைத்தார்.

இதன் போது மக்கள் மத்தியில் கருத்து தெரிவித்த அமைச்சர்..

இன்று நாட்டில் சமாதனம் ஏற்பட்டதன் காரணமாக நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்கின்றோம். ஆலயத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி பணிகளுக்கு என்னால் முடிந்த உதவிகளை மேற்கொள்வேன்.

என்னுடைய உதவிகளை அரசியல் அல்லது தொழிற்சங்க நடவடிக்கையாக கருதவேண்டாம். எனது வருகைக்காக தோட்டத்தில் உள்ள அனைவரும் இன்று தங்களின் வருமானத்தினையும் பொருட்படுத்தாமல் இங்கு வந்துள்ளீர்கள் எனவே உங்கள் அனைவரையும் கௌரவபடுத்துகின்றேன்.

எனவே நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதன் மூலம் எமது எதிர்கால சிறுவர்களுக்கு சிறந்த நாட்டை உருவாக்க முடியும் என அவர் இதன் போது தெரிவித்தார்.