ஆனையிறவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்?



வடமாகாணத்தில் கிரிக்கெட் சங்கங்கள் இன்னும் இரண்டொரு வருடங்களில் அமைக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் வைத்துத் தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கிளிநொச்சியில் 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு மைதானத்தில் பணிகள் தாமதமடைவது குறித்தும், யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டுக் கட்டடத் தொகுதியொன்றும் சர்வதேச கிரிக்கெட் அரங்கொன்றும் அமைக்கப்படுமா எனவும், ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

"யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னாரில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் ஒன்றரை மணி நேரத்தில் வந்துசேரக்கூடிய இடமான ஆனையிறவு பகுதியில், சர்வதேச கிரிக்கெட் மைதானமொன்றை அமைப்பது குறித்து ஆராய்ந்து வருகின்றோம்” என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.