குளவிக் கொட்டு



(கிசாந்தன்)
தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 07பேர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லிந்துலை மவுஸ்ஸாஎல்ல மேற்பிரிவு தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும்தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இச்சம்பவம் 02.06.2016 அன்று இடம்பெற்றுள்ளது.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 07 பேர் பெண் தொழிலாளர்களாவர்.
இவர்களில் 7 பேரும் தொடர்ந்தும் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலைவட்டாரங்கள் தெரிவித்தன.