ஒருகொடவத்தை - கடுவலை வீதியில் மட்டுப்பாடு



இன்று (01) இரவில் இருந்து எதிர்வரும் மூன்று இரவுகளுக்கு ஒருகொடவத்தை - கடுவலை வீதியினால் போக்குவரத்து செய்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி இரவு 9.00 மணியில் இருந்து அதிகாலை 5.00 மணிவரை அந்த கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வௌ்ளத்தினால் ஏற்பட்டுள்ள கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதால் இக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.