ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்த்தன மற்றும் சிரியாணி விஜேவிக்ரம ஆகியோர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் வட் வரி அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே இவர் காயமடைந்துள்ளார்.
கோட்டை பகுதியில் பொலிஸ் தடைகளை தள்ளிக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் முன்னாள் செல்ல முற்படுகையில் பொலிஸ் தடுப்பு வேலி அவர் மீது விழுந்ததில் காயம் ஏற்பட்டுள்ளதாக ரோஹித்த அபேகுணவர்த்தனவின் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்


