அட்டாளைச்சேனையில் விபத்து - இளைஞர் பலி




(ஜமால்தீன்)

அட்டாளைச்சேனை மீணோடைக்கட்டு பிரதான வீதியில் இன்று (28) இடம்பெற்ற வாகான விபத்தில் மோதுண்ட இளைஞன்  ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்று மரணித்துள்ளார். 

குறித்த இளைஞர்   கொழும்பினை பிறப்பிடமாக்க கொண்டவரும் கடந்த 6 மாத காலமாகவே அட்டாளைச்சேனையில் குடும்பத்தாருடன் வசித்து வருபவருமாகும். முடிவெட்டுவதற்காக சென்று வீடு திரும்ப வீதியினைக் கடக்க முற்படும் போது இவ் விபத்து நேர்ந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

கல்முனையை நோக்கி பயனித்த அட்டாளைச்சேனைச் சேர்ந்த டிப்பர் வண்டி குறித்த இளைஞன் மீது மோதுண்டு இளைஞன் ஈருளி கீழ் புகுந்தவாறு காயமடைந்து வைத்தியசாலையின் அவசர பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையிலையே மரணமடைந்துள்ளார். 

மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.