கவிரவெல பாடசாலை வெள்ளப்பெருக்கால் பாதிப்படையலாம்



(க.கிஷாந்தன்)

அட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட சாமிமலை கவிரவெல ஆரம்ப பாடசாலை ஆற்றோரத்தில் அமைந்துள்ளதால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில் பாடசாலை வளாகத்துக்குள் வெள்ளநீர் புகுந்து விடுவதால் பாடசாலை நிருவாகத்தினர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட ஆற்றை ஆழமாக வெட்டுதல் அல்லது பாடசாலைக்கு அருகில் பாதுகாப்பு மதில் ஏற்படுத்தல் ஆகிய நடவடிக்கைகள் மூலமாகவே கவிரலெ ஆரம்ப பாடசாலை கட்டிடத்தினைப் பாதுகாக்க முடியுமென பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இவ்விடயம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவினரும், மத்திய மாகாண முதலமைச்சரும் கவனத்திற் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.