ஜனாதிபதி மாளிகை மக்களின் பார்வைக்கு



கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை, மக்கள் பார்வைக்காக இன்றிலிருந்து இருந்து 6 நாட்களுக்கு திறந்து வைக்கப்பட உள்ளது என ஜனாதிபதி ஊடக ப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு இணங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பிரித்தானியர் ஆட்சி காலத்தில் (1804) இந்த இல்லம் பிரித்தானிய ஆளுநரின்உத்தியோகபூர்வ இல்லமாக காணப்பட்டுள்ளது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின் இலங்கை ஆளுநரின் இல்லமாக இருந்ததாகதெரிவிக்கப்பட்டுள்ளது.