யாழ்ப்பாணம்-மன்னார் பிரதான வீதியில் நேற்று (21) செவ்வாய்க்கிழமை இரவு இடம் பெற்ற விபத்தில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா சிறு காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி தனது வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த போது மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை வீதியில் நீதவானின் வாகனம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த போது வீதிக்கு குறுக்காக மாடுகள் சென்ற நிலையில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
இதன் போது காயமடைந்த நீதவானை
பொலிஸார் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பொலிஸார் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா மன்னார் பொது வைத்தியசாலையில்சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும் நீதவானின் பாதுகாப்பிற்காக சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவரும் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவர் குணமடைய சிலோன்24 இணையத் தளம் பிரார்திக்கின்றது


Post a Comment
Post a Comment