இளம் தம்பதியினரின் சடலங்கள்



அநுராதபுரம், புலன்குளம,கடுகெலியாவ வாவியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் காணாமல் போன இளம் தம்பதியினரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த 4 தினங்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்த தம்பதியினரே இவ்வாறு காணாமல் போயிருந்தனர்.
நேற்று மாலை குறித்த வாவியில் பூ பரிப்பதற்காக படகில் சென்று கொண்டிருந்த போதே படகு கவிழ்ந்துள்ளது.
சம்பவத்தில் 19 வயதுடைய யுவதியும் 21 வயதுடைய இளைஞருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.