எப்பாவெல பொஸ்பேட் அரச நிறுவனத்தின் கட்டடத்தில் பரவிய தீயினால் கணக்காய்வு மற்றும் விநியோகப் பிரிவு அழிவடைந்துள்ளது.
இன்று அதிகாலை 3 மணியளவில் தீ பரவியுள்ளதுடன் இதனால், எப்பாவெல பொஸ்பேட் அரச நிறுவனத்தின் விநியோகப்பிரிவு அலுவலகம் தீக்கிரையாகியுள்ளது.
அங்கிருந்த ஆவணங்கள் அழிவடைந்துள்ளதுடன் தீயினால் நிறுவனத்திற்கு சுமார் 60 இலட்சம் ரூபா நட்டமேற்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் உபாலி அநுராத திசாநாயக்க தெரிவித்தார்.
அநுராதபுரம் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
எப்பாவெல பொஸ்பேட் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக்கூறப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பில், பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அரச நிறுவனங்களில் கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இதுபோன்ற தீ சம்பவங்கள் பதிவாகியிருந்ததுடன், கொழும்பு மாவட்ட செயலகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி பரவிய தீ சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Post a Comment
Post a Comment