#சீனா: வெள்ளப் பெருக்கால் 150 பேர் பலி



சீனாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் குறைந்தது 150 பேர் இறந்தனர். பலர் காணாமல் போயுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஹெபெய் மற்றும் ஹூனான் மாகாணங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
குறைந்தது 114 பேர் ஹெபெயில் பலியாகியுள்ளனர். 111 பேரை காணவில்லை. 53 ஆயிரம் வீடுகள் அழிந்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
15 பேர் பலியாகியுள்ள ஹெனான் மாகாணத்திலும் 72 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர்.
சிங்தாய் நகரத்தில் மட்டும் 25 பேர் பலியாகியிருப்பது வெள்ளப்பெருக்கிற்கு முன்னரே அரசு எச்சரிக்கவில்லை என்று மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தூண்டியுள்ளது.
வெள்ளப்பெருக்கு முன்னெச்சரிக்கை அளிக்கப்படாதது மற்றும் செயல்திறனற்ற மீட்புதவி முயற்சிகளை பற்றி அவர்கள் புகார் தெரிவித்திருக்கின்றனர்.