துரத்தி துரத்தி அடிப்பதன் மூலம் நாட்டை முன்னேற்ற முடியாது




கம்பனிச் சட்டத்தை திருத்தம் செய்யாது நிறுவன பதிவுக் கட்டணம் அறவிடப்படுவதாகவும், வெட்வரி சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படாமல் வெட் வரி அறவிடப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கூறுகின்றார். 

அதன்படி குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல், பாராளுமன்றத்திற்கு அப்பால் சென்று நிதியமைச்சர் அரச அதிகாரிகளுக்கு அழுத்தங்கள் பிரயோகித்துக் கொண்டிருப்பதாக அவர் கூறுகின்றார். 

கலால் திணைக்களம் இருந்தும் கூட நிதியமைச்சுக்குள் பிரிவொன்றை நிறுவி இருப்பதன் மூலம் கலால் திணைக்களத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலையில் நிதியமைச்சு சீர்குலைந்து காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார். 

இந்த நிலமையில் எதிர்க்கட்சியை துரத்தி துரத்தி அடிப்பதன் மூலம் நாடு முன்னோக்கி செல்லாது என்றும், அவர் கூறினார். 

புஞ்சி பொரள்ளை பௌத்த நிலையத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த ஜீ.எல். பீரிஸ், நீதிமன்ற உத்தரவுப்படி மே மாதம் 2ம் திகதி முதல் அறவிடப்பட்ட வெட் வரி அதிகரிப்பு தொகையை மீளவும் மக்களுக்கு திருப்பி செலுத்த வேண்டும் எனக் கூறினார்