காத்தான்குடி மாணவியைக் காணவில்லை



மட்டக்களப்பு – காத்தான்குடி நகரில், நேற்று (திங்கட்கிழமை) காலை பாடசாலைக்குச் சென்ற 16 வயது நிரம்பிய மாணவியொருவர், இதுவரை வீடு திரும்பவில்லையென காத்தான்குடி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்கும், ‪நஜிமுதீன் பாத்திமா தஸ்னிகா (வயது – 16) என்ற மாணவியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
வழமைபோல் நேற்று காலை பாடசாலைக்குச் சென்றபோதும், குறித்த மாணவி பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதோடு, மாணவியை தேடும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அத்தோடு, மாணவி பற்றிய தகவல் அறிந்தோர், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறும் காத்தான்குடி பொலிஸார் கேட்டக்கொண்டுள்ளனர். காத்தான்குடி பொலிஸ் நிலையம் – 0652246595, மாணவியின் தந்தை நஜிமுதீன் – 0775161797.