சவுதியில் எதிர்ப்பு நடவடிக்கை



கடந்த நவம்பர் மாதம் முதல் தமக்கான சம்பளம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து சவுதியின் தமாம் நகரில் இலங்கையைச் சேர்ந்த 12 பேர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 3 ஆம் திகதி முதல் உணவுக்கான கொடுப்பனவும் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இதேவேளை, தமது விடயம் தொடர்பில் சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்குத் தெரிவித்தும் இது வரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவி்ல்லை என இலங்கையைச் சேர்ந்த பணியாளர்கள் தெரிவித்தனர்.
இலங்கையர்களுடன் சேர்ந்து இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த 1200 பேர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகார பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.
நாளை தான் இதுகுறித்து கருத்துத் தெரிவிப்பதாக அவர் கூறினார்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடம் வினவியபோது, இதுகுறித்து ஆராய்ந்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக பணியகத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் உபுல் தேஷப்பிரிய தெரிவித்தார்.