அரையாண்டு பரிசோதனை



(ஷமி.மண்டூர்)
  மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் அரையாண்டு பொலிஸ் பரிசோதனை (28) வியாழக்கிழமை காலை பொலிஸ் நிலையவளாகத்தில் நிலையப் பொறுப்பதிகாரி ரசிக்க சம்பத் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.தினேஸ் கருணாநாயக்க அவர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டார்.

பொலிஸாரின் அணிவகுப்பு, வாகனங்கள்,அலுவலகக் கட்டடங்கள் பொலிஸ் நிலையம் மற்றும் வளாகத்தில் உள்ள பௌதீக் வளங்கள் உள்ளிட்ட என்பவற்றின் பராமரிப்பு தொடர்பாக பரிசோதிக்கப்பட்டது.அத்தோடு பொலிஸாதின் சேமநலன்கள் பற்றியும் கேட்டறிந்தார்