(க.கிஷாந்தன்)
தலவாக்கலை திவிநெகும வங்கிக்கு உட்பட்ட 15 கிராம சேவக பிரிவுகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள் 24.07.2016 அன்று தலவாக்கலை திவிநெகும காரியாலயத்தில் வைத்து பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க அவர்களின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.
சுமார் 27 இலட்சம் ரூபா பெறுமதியான விவசாய உபகரணங்களே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் குடும்ப வருமானத்தை பெருக்கி கொள்ளும் வகையில் விவசாய நடவடி;க்கைகளை மேம்படுத்துவதற்காக இவ் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

