யாழ்ப் பல்கலை கற்றல் நடவடிக்கைகள் புதன்கிழமை



யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் புதன்கிழமையில்இருந்து பகுதியளவில்ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்கீழ் எதிர்வரும் புதன்கிழமையன்று 20ஆம் திகதி மருத்துவப்பீட மற்றும்சித்த மருத்துவப்பீட பயிற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதனை சமிஞ்சையாக வைத்துக்கொண்டு ஏனைய பீடங்களும் திறக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணபல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வசந்தி அரசரட்ணம் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றசெய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் கடந்த தினத்தில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பில் விசாரணைகள்நடத்தப்படுகின்றனஇந்தநிலையில் மோதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர்குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இனி இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என்றுஉறுதியளித்துள்ளது. மூதவையும் இதுபோன்ற சம்பவம் இனி இடம்பெறக்கூடாது என்பதில்உறுதியாகவுள்ளது.
இந்தநிலையில் தென்னிலங்கைக்கு சென்றுள்ள மாணவர்களுக்கும் பல்கலைக்கழகத்தில்இயல்பான நிலை ஏற்பட்டுள்ளது என்பதை காண்பிக்கவேண்டியுள்ளது.
இது குறிப்பாக விஞ்ஞானப்பீட பீடாதிபதிக்கும் பொறுப்பாகியுள்ளது. எனவே தென்னிலங்கைமாணவர்கள் தமது பெற்றோருடன் வந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமது கற்றல்நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என்று துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்துஆராய்வதற்காக மூன்று அமைச்சர்கள் நாளையதினம் அங்கு விஜயம் செய்யவுள்ளதாக அரசாங்கதகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சட்டம் ஒழுங்குகள் துறை அமைச்சர் சாகல ரத்னாயக்கவை கோடிட்டு இந்த செய்தியைதிணைக்களம் வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடந்த தினம் இடம்பெற்ற மோதல் கண்டிக்கப்படவேண்டியதுஎன்றும் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலுடன் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாகபல்கலைக்கழக நிர்வாகம் உறுயளித்துள்ளது.
அத்துடன் இதற்கான விசாரணைகளை காவற்துறையினர் சீராக மேற்கொள்வார்கள்.
இந்தநிலையில் இந்த மோதல் சம்பவத்தை இனங்களுக்கு இடையிலான முறுகல் என்ற வகையில்பிரசாரங்களை மேற்கொள்ள சில குழுக்கள் முயற்சித்து வருகின்றன.
எனினும் இவை இரண்டு மாணவக் குழுக்களுக்கு இடையிலான மோதலாக மாத்திரமே இந்த விடயம்பார்க்கப்பட என்றும் தகவல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.