லிந்துலை லெமனியர் தோட்டத்தில் இருந்து லிந்துலை நகரத்திற்கு சென்ற முச்சக்கரவண்டி ஒன்று லிந்துலை நகரத்தில் உள்ள பிரதான வீதியில் இருந்து 102 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துகுள்ளாகியுள்ளது.
இதனால் முச்சக்கரவண்டியில் பயணித்த 04 பேர் பலத்த காயமடைந்து லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரனையை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது மலையக பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றதுடன், அக்கரப்பத்தனை, தலவாக்கலை, நுவரெலியா, நானுஓயா ஆகிய பிரதேசங்களில் அதிகமான பனிமூட்டமும் காணப்படுகிறது.
இதனால் வாகன விபத்துக்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளதால் சாரதிகள் வாகனங்களை அவதானமாக செலுத்துமாறு லிந்துலை பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

