மட்டக்களப்பில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் வைத்து 18 சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
அவுஸ்திரேலியா நோக்கி படகு மூலம் செல்ல முற்பட்ட வேளையே இவர்கள் இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான முறையில் இவர்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறித்து, கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலை அடுத்தே இந்த சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, கடற்படை வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் கைதுசெய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளுக்காக கடல்சார் குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

