ஆசிரிய விண்ணப்ப வயதெல்லை 40 ஆகும்?



(படுவான் பாலகன்) 
கிழக்கு மாகாணத்தில் கஸ்டப்பிரதேச பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை உள்ளீர்ப்பதற்காக 03.08.2016ம் திகதி கோரப்பட்டுள்ள விண்ணப்பத்தில் 18வயது தொடக்கம் 35வயது வரையான பட்டதாரிகளே விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இதற்கமைய விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வயதெல்லையை 45வரை அதிகரிக்க வேண்டும் என கிழக்கு மாகாண பட்டதாரிகள் அரசியல்வாதிகளிடம் முறையிட்டதற்கமைய அரசியல்வாதிகள் ஆளுனரின் கவனத்துக்கு கொண்டு சென்றதை அடுத்து 40வயது  வரையான பட்டதாரிகள் விண்ணப்பிக்க நடவடிக்கை எடுப்பதற்கு கிழக்கு மாகாணசபை ஆளுனர் ஒஸ்ரின் பெனார்ண்டோ உறுதியளித்துள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.