50 அடிப் பள்ளத்தைப் பதம் பார்த்த ரிப்பர்



(க.கிஷாந்தன்)

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா நகரப்பகுதியில் டிப்பர் ரக வாகனம் ஒன்று நிறுத்தி வைக்க முற்பட்ட போது 50 அடி பள்ளத்தில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து 20.08.2016 அன்று காலை 10.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

குறித்த டிப்பர் ரக வாகனம் வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட முற்பட்ட வேளையில் வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்து  கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பேன்டர் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் டிப்பேன்டர் வாகனமும் சேதமாகியுள்ளது.

இவ்விபத்தினால் உயிர் சேதங்கள் இல்லாத போதிலும் டிப்பர் ரக வாகனத்தின் சாரதி படுங்காயங்களுக்குள்ளாகி நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.