(SAJIL NEWS_ HUSSAIN)
மாகாண சபைகளின் புதிய அதிகாரப் பகிர்வும் அதற்கான தீர்வும் சம்மந்தமான இரு நாள் மாநாடு இன்று (06) சனிக்கிழமை நீர்கொழும்பு ஹெரிடேன்ஸ் மாநாட்டு மண்டபத்தில் மாற்றுக்கொள்கை நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியஜோதி சரவணமுத்து தலைமையில் ஆரம்பமானது.

இம்மாநாட்டில் இலங்கையின் சகல மாகாண முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எதிர்க் கட்சித் தலைவர்கள் ஆகியோர்கள் கலந்து கொள்கின்றனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் அங்கு நிகழ்வில் உரையாற்றும்போதுஈ
தற்போதைய மாகாண அதிகாரங்கள் பெயரளவிலேயே இருக்கிறது. மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் எங்களால் காத்திரமான விடயங்களைச் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.
எடுத்துக்காட்டாக கடந்த வாரம் கிழக்கு மாகாணத்தில் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. ஆனால் அதில் வயதெல்லை குறிப்பிடப்பட்டிருந்தது. இதுசம்மந்தமாக நான் அவசரமாக இது தொடர்பானவர்களைத் தொடர்பு கொண்டபோது அது மத்திய அரசின் நடவடிக்கை என்று பதில் கிடைத்தது.
வடக்கு கிழக்கில் யுத்தம் மற்றும் இடம்பெயர்வுகள் காரணமாக கல்வியைப் பின்போட்ட மாணவர்களின் பட்டப்படிப்பு தாமதமாகியதன் காரணமாக வயதெல்லைகள் கூடிய பட்டதாரிகள் அதிகமாக உள்ளார்கள்.
பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பம் கோரலில் உடனடியாக வயதெல்லையை மாற்றவேண்டும் என்பதனை இம்மாநாட்டில் கூறிவைக்க விரும்புகிறேன் என்றார்.
இம்மாநாடு நாளை (07) ஞாயிறுற்றுக்கிழமை வரை இடம்பெறவுள்ளது