பிரதமர் ரணில் விக்கிமரசிங்க இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இந்தோனேசியாவிற்கு புறப்பட்டார்.
இந்தோனேசிய ஜகர்த்தா நகரில் நடைபெறவுள்ள 12 ஆவது இஸ்லாம் பொருளாதார மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிமரசிங்க கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தோனோசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ, நிதியமைச்சர், கடல்வலயத்திற்கு பொறுப்பான அமைச்சர்கள் உட்பட சிலரை சந்தித்து இருதரப்பு கலந்துரையடல்களில் ஈடுபடவுள்ளார்.

