டுபாய் சத்வா நகரில் பணிபுரியும் இலங்கையை சேர்ந்த 34 பேர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தாம் பணிபுரியும் நிறுவனம் தமக்கான ஊதியத்தை உரிய வகையில் வழங்க தவறியுள்ளதாகவும், அடிப்படை வசதிகள் ஏதும் பெற்று தரவில்லை எனவும் இலங்கை பணியாளர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
தொழிற்சாலையொன்றில் சுத்திகரிப்பு பணிகளுக்காக 34 பேரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் டுபாய் சத்வா நகருக்கு சென்றுள்ளனர்.
மூன்று மாதங்கள் பணிபுரிந்த தமக்கு ஊதியம் வழங்காததால், கடந்த 2 மாதங்களாக பணிக்கு செல்லவில்லை என குறித்த பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் சத்வா நகரிலுள்ள பஸ் நிலையத்தில் தமது எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக இலங்கை பணியாளர்கள் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தனர்.
உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி பெரும் சிரமத்திற்குள் வாழ்வதாகவும் பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

