அம்பாரை சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவுப் பகுதியில் கணவனால் மனைவி தீவைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் 5 திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக சம்மாந்தறைப் பொலிஸார் தெரிவித்தனர்
இது தொடர்பாக மேலும் தெரிய வருகையில்
காரைதீவு வெட்டடுவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணான மொறிஸ் மெரினா வயது 31 என்பவரே மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இவர்கள் திருமணம் முடித்து மூன்றுமாதமாக இருப்பதுடன் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தக்கமே இதற்குக் காரணம் என்றும் தெரிய வருவதுடன் அன்று அதிகாலை கணவக் தீவைத்ததாலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் அப்பெண்ணின் கணவரான குகதாசன் வயது 32 என்பவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர் படுத்த இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

