பியசேன மீண்டும் விளக்கமறியலில்



தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீ.ஏ.பியசேன எதிர்வரும் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களாகக் காணாமற்போயிருந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ப்ராடோ ரக ஜீப் ஒன்றை தனது சொந்தத் தேவைக்குப் பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீ.ஏ பியசேன கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
குறித்த வாகனத்தின் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.