#மருதமுனையில் திருட்டு



-ஏ.எல்.எம்.ஷினாஸ்- 
மருதமுனைப் பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டு கடைகள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாக  பொலிஸில்  கடை உரிமையாளர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மசூர் மௌலான வீதியிலுள்ள சில்லறைக் கடையொன்றிலும் புத்தக வியாபார நிலையத்திலும்  திருட்டுப் போயுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.