#களுதாவளை: எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வீடு சாம்பல்



மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் இன்று 3.45 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் வீடு ஒன்று முற்றாக தீக்கிரையாக்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
களுதாவளை வன்னியார் வீதியில் அமைந்துள்ள செல்லையா ஜீவரத்தினம் என்பவரின் வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வீடு எரிந்து முற்றாக சாம்பலாகியுள்ளது.
இந்நிலையில் இவ்விடயமறிந்த களுவாஞ்சிக்குடி பொலிசார், உடன் ஸ்த்தலத்திற்கு விரைந்து உயிர் சேதம் ஏற்படாமல் காப்பாற்றியதாக களுவாஞ்சிக்குடி பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி என்.ரி.அபூபக்கர் தெரிவித்தார்.
வீட்டிலுள்ள முக்கிய ஆவணங்கள், தொலைக்காட்சிப்பெட்டி, குளிரூட்டி உட்பட அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும், இச்சம்வம் தொடர்பில் பொலிசார், கிராம சேவை உத்தியோகஸ்தர் ஆகியோருக்கு அறிவித்துள்ளதாகவும், வீட்டு உரிமையாளர் செல்லையா ஜீவரத்தினம் தெரிவித்தார்.