ரிதிதென்ன விபத்து: இரண்டாவது இராணுவ வீரரும் பலி




(AHM.HUSSAIN)
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் ரிதிதென்ன பிரதேசத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிர் இழந்த சம்பவம் இன்;று (11.08.2016) மாலை 05.00 மணியளில் இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.
மட்டக்களப்பு பகுதிக்கு வந்து திரும்பிச் சென்ற பொலனறுவை பகுதியைச் சேர்ந்த எல்ப் லொறியும் பொலநறுவை பகுதியில் இருந்து மட்டக்களப்பு பக்கம் வந்த மோட்டார் சைக்கிளும் ரிதிததென்ன பகுதியில் 109வது மைல் கல்லுக்கும் 110 மைல் கல்லுக்கும் இடையில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
இவ்விபத்தில் அனுராதபுரம் முகடவெல பிரதேசத்தைச் சேர்ந்த கே.பி.நிஹால் பண்டார (வயது – 47) என்பவர் காயமடைந்த நிலையில் வெலிக்கந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலநின்றி உயிர் இழந்துள்ளார் இவருடன் பயணித்த கே.பி.என்.குணரத்ன (வயது – 38) என்ற இராணுவ வீரர் காயமடைந்த நிலையில் வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ் விபத்து சம்பவம் தொடர்பாக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.